Sunday, March 8, 2015

மிஸ்டர். மொக்கை டாக்டரிடம் போனார்....

மிஸ்டர். மொக்கை டாக்டரிடம் போனார்..

"டாக்டர்.. எனக்கு பாத்ரூம் போவதில் கொஞ்சம் பிரச்சினை.."

என்ன பிரச்னை.. சரியாக போவதில்லையா..?

அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது..?

கண்ட நேரத்தில் பேதியாகிறதா..?

அப்படியெல்லாம் இல்லை டாக்டர்.. சரியாக காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்தது போல் வந்து விடுகிறது..

எல்லாம்தான் சரியா இருக்கே..? அப்புறம் என்ன..?

ஒன்று மட்டும் சரியில்லை டாக்டர்.. தினமும் காலை எட்டு மணிக்கு தான் எனக்கு விழிப்பே வருகிறது...!
.....................................................................


மிஸ்டர். மொக்கை ; அடுத்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்குற பொண்ணு அழகா இருக்குதே..

மிஸஸ் மொக்கை ; அழகு மட்டுமில்லீங்க.. அறிவும் இருக்கு.. வந்த அன்னிக்கே என்னை "அண்ணி" ன்னு முறை சொல்லி கூப்பிடுது..!!

மிஸ்டர். மொக்கை ; @#$%&&^*!!!
..............................................................


ஒருவர் தவறுதலாக கார் சாவியைக் காருக்குள்ளேயே வைத்து கதவைப் பூட்டிவிட்டார். நம் மொக்கைதான் மெக்கானிக். அவரை வரவழைத்து கதவைத் திறந்து விடச் சொல்லிவிட்டு காபி குடிக்க வீட்டுக்குள் சென்றுவிட்டார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது மிஸ்டர். மொக்கை, ஓட்டுநர் பக்க கதவைத் திறக்க போராடிக் கொண்டிருந்தார்.. எதேச்சையாக கார் உரிமையாளர் அடுத்த பக்க கதவின் கைப்பிடியை அழுத்திய போது கதவு திறந்து கொண்டது.ஆச்சரியமடைந்த கார்க்காரர் மொக்கையைப் பார்த்து...

" ஹலோ.. இந்த பக்கம் திறந்துதான் இருக்கு.. நான் சரியா கவனிக்கல போல இருக்கு..!"

மிஸ்டர். மொக்கை சொன்னார்..

" இல்லே.. நான் தான் அதை சற்று முன் சிரமப்பட்டு திறந்தேன்.. மற்ற மூன்று பக்க கதவுகளையும் திறந்தபின் அழைக்கிறேன்.. நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்..!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா.

புலவர் : அய்யகோ மன்னா... கி.கி.

சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......


...........................................................

மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு. கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்? மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? 

...................


மன்னா.. நம் ராணியாரை எதிரி மன்னன் தூக்கிச் சென்றுவிட்டான்..

ஆஹா.. அப்படியா..? ஒழிந்தான் கிராதகன்.. இனி நமக்கு எதிரியே கிடையாது..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உங்க மனைவியை ‘கை பேசி’ னு செல்லமா கூப்பிடறீங்களே…
அவங்க செல்போன் பிரியரா..?

அட, நீங்க வேற…அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும்..
...................................................


குப்பனும் சுப்பனும் எகிப்தில் உள்ள பிரமிடுகளை
சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.

பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும்
விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி நம்ம
குப்பன் சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப்
பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு
இறந்தவனாக இருக்க வேண்டும்”.

சுப்பன் உடனே சொன்னாராம் “நீங்கள் சொல்வது
உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள்
"B.C.2500" என்று லாரியின் நம்பர் பிளேட்டைக்கூட
எழுதி வைத்திருக்கிறார்கள்” !!!.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


மந்திரி ; அரசே.. நம் வீரர்களின் அல்பத்தனத்தைப் பயன்படுத்தி எதிரி மன்னன் எளிதாக போரில் வென்றுவிட்டான்..

அரசர் ; எப்படி..?

மந்திரி ; நம் படை வீரர்கள் இருக்கும் பகுதிக்கு பேரீச்சம்பழ வண்டிக்காரர்களை அனுப்பி வைத்துவிட்டான் மன்னா..வீரர்கள் வாள் கேடயங்களைப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்றுவிட்டார்கள்..
........................................

காதல் என்பது, ஜோஸ் ஆலுகஸ் போல
இது தங்கமான உறவு
ஆனா நட்பு என்பது ,

கல்யாண் ஜிவல்லர்ஸ் போல
என் நண்பன் என் உரிமை 
...................................................


நீதிபதி: மாமியார் முகத்தில எதுக்கு அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சிங்க? 

மருமகள்: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான். ...

..........................................................................................ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார்.

சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்.

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.

"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா?" என கேட்டார்.

எரிச்சலடைந்த சர்வர்,

"பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா..? 45 ரூபாய்தான்" என்றார்.

பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார்.

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில்
வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார்.

மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது, முதியவர் சொன்னார்"

"வச்சுக்கோ...உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை...
.................................................
.

கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,

''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.

அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,

''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''

கடன் வாங்கினவன் சொன்னான்,

''இதென்ன பெரிய அவமானம்?

இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!'' 

......................................................


காவலன் 1 ; மன்னருக்கு திடீர் மாரடைப்பாமே.. ஏன் ?

காவலன் 2 ; சுயம்வரத்துக்கு வந்த எல்லா இளவரசர்களையும் கட்டி வைன்னு இளவரசி அட்டகாசம் பண்ணுதாம்...!
....................................................................................

"அப்பா 'சுதந்திரம்' ன்னா என்னப்பா?"

"நாம ஒரு விஷயத்தை மத்தவங்க அனுமதி இல்லாம நாமளே முடிவு பண்ணி செய்யறது"

"அப்ப நீ மட்டும் எதுக்கு எல்லா விஷயத்துக்கும் அம்மாகிட்ட கேக்கற?"

"அது தந்திரம் டா.........." (பயபுள்ள நல்லாவே கோத்து விடறானே..)

...............................................


மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா? கணவன்: அப்படித்தான் சொல்றாங்க.. மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க? கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே? ...

.......................................

ஒருவர்: துன்பம் எப்பவுமே நம்ம கூடத்தான் இருக்கும். மகிழ்ச்சி அப்பப்ப வந்துட்டு போகும். மற்றவர்: ஆமாமா, என்னோட மனைவி என்கூடவே இருக்கா... ஆனா அவ தங்கச்சி எப்பாவச்சிதானே வந்துட்டு போறா.. .

...................................

ராமசாமி =- பதட்டம், டென்ஷன், பீதி .. இந்த மூன்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன.?. சோமசாமி =- தெரியலையே? ராமசாமி =- மனைவி கர்ப்பமா இருந்தா பதட்டம். காதலி கர்ப்பமானா டென்ஷன். இந்த ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் கர்ப்பமானா வர்றதுதான் பீதி...!!...

/..................................


மாலா: மாமியார் இறந்து போனதுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டியே அதுல டாக்டருக்கு ஏன் நன்றி சொன்னே? கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்.

................................

சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி? மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்.

................................

வாழ்க்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது...

விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"

விலகி எது போனாலும் "DONT CARE"

...............................................

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்....!!!!! ...

.........................................

ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?'' மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க! ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க!....

.................................

மகன்: நம்ம அப்பா முட்டாளாம்மா?"அம்மா: "எதுக்குடா இப்படி கேகிறே?"மகன்: "எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே".....
...............................................

புவனா : ஏன்டி உன்னோட மாமியார்க்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே இப்போ எப்படி இருக்காங்க? மாலதி : சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி இப்படி எல்லா வைத்தியம் பாத்தாச்சு எதுக்கும் மசியலை. புவனா : அடாடா இறந்துட்டாங்களா? மாலதி : அட நீ வேற குத்துக்கல்லாட்டம் இருக்காங்க ! ...
.................................


ஒருத்தர் : ஈமு கோழிக்காரன் ஏமாத்திருவான்னு தெரிஞ்சும் ஏன் பணத்தை கட்டுனாங்க? மற்றவர் : கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிறதில்லையா? அதுமாதிரிதான். ஏமாந்துருவோம்னு தெரிஞ்சும் பணத்தை கட்டிட்டாங்க. ...

No comments:

Post a Comment